உளவளத்துணை டிப்ளோமா கற்கைநெறி – புதிய அனுமதிக்கான தெரிவுப் பரீட்சை – 2024 – 1ம் அணி

புதிய அனுமதிக்கான தெரிவுப் பரீட்சை – 2024 – 1ம் அணி

மேற்படி குறித்த பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்த, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளுக்கான தெரிவுப்பரீட்சையானது எதிர்வரும் 19.08.2024 (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணி தொடக்கம் 2.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாதோர் 15.08.2024 (வியாழக்கிழமை) மற்றும் 16.08.2024 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (0212223612) எம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

உளவளத்துணை வினாக்களைக் கொண்ட இத்தெரிவுப் பரீட்சையானது பரீட்சை அனுமதி அட்டையில் குறிக்கப்பட்டுள்ள பரீட்சை மண்டபத்தில் நடைபெறும். பரீட்சார்த்திகள் அனைவரும் பாடசாலை அதிபர் / கிராம அலுவலர் / சமாதான நீதவான் / அரச திணைக்களத் தலைவர் ஆகியோரில் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டையுடன், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு மண்டபத்தினுள் அனுமதிக்கப்படும் போது காண்பித்தல் வேண்டும்.

மேலதிக அறிவித்தல்கள் அனைத்தும் எமது திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தளத்தில் www.codl.jfn.ac.lk பிரசுரிக்கப்படும்.

……………..
உதவிப் பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
12.08.2024

Scroll to Top