LMS க்கான கடவுச்சொல் (LMS Password) மற்றும் பயனாளி பெயர் (User Name) இனை மறந்தால் எவ்வாறு புதிதாக மாற்றுவது?
Login பக்கத்திற்குச் சென்று Forgotten your Username or Password இனை Click செய்து Username அல்லது முன்னர் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்கு வழங்கிய Email Address ஐக் கொடுத்து Search ஐ Click செய்யவும். உங்களது Email Account க்குச் சென்று LMS Admin CODL UOJ இலிருந்து உங்களுக்குக் கிடைக்கப்பெற்ற Gmail ஐ Click செய்து அதிலுள்ள Link ஐ Click செய்யவும் (Email கிடைக்கப்பெற்று 30 நிமிடங்களுக்குள் Click செய்துகொள்ள வேண்டும்). Set Password பக்கத்தில் New Password இடைவெளியில் புதிதாக ஒரு Password ஐக் கொடுத்து அதே Password ஐ மறுபடியும் New Password இடைவெளியில் கொடுத்து Save Change ஐ Click செய்து கொள்ளவும்.
Password ஒன்றை தெரிவுசெய்யும் விதிமுறை
- ஆகக்குறைந்தது 8 digit ஐக் கொண்டிருக்க வேண்டும்.
- ஒரு இலக்கம் இருக்க வேண்டும்.
- ஒரு சிறிய ஆங்கில எழுத்து இருக்க வேண்டும்.
- ஒரு பெரிய ஆங்கில எழுத்து இருக்க வேண்டும்.
- ஒரு விசேட குறியீடு இருக்க வேண்டும் (உதாரணம்: */#/@/$).
CODL திறந்திருக்கும் நாட்கள் மற்றும் நேரம் என்ன?
திங்கள் முதல் சனி வரை 9.00AM -12.30PM / 1.45PM-3.45PM
மாணவர்கள் பரீட்சைக்குச் சமூகமளிக்காதபோது என்ன வகையான ஆவணங்கள் எவ்வளவு காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்?
மாணவர்கள் மருத்துவ அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்திற்காக பரீட்சைக்குச் சமூகமளிக்காதபோது பரீட்சை முடிவடைந்த இறுதித் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் தங்களது மேன்முறையீட்டுப் படிவத்தினைப் பூர்த்தி செய்வதுடன் முறையான கடிதம் & மருத்துவ அறிக்கை அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தினை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் பரீட்சை அனுமதி அட்டை என்பவற்றையும் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பரீட்சை முடிவடைந்து 14 நாட்களுக்குள் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்குக் கிடைக்கக்கூடியவாறு சமர்ப்பித்தல் வேண்டும். பரீட்சை முடிவடைந்த இறுதித் திகதியிலிருந்து 14 நாட்களின் பின்னர் தங்களால் சமரப்பிக்கப்படும் மேன்முறையீட்டுப் படிவங்கள் நிராகரிக்கப்படும். அத்துடன் மாணவர்களால் அனுப்பப்படும் மருத்துவச் சான்றிதழ்கள் பல்கலைக்கழக வைத்திய அதிகாரியால் பரிந்துரைக்கப்படாத பட்சத்திலும் மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும்.
மாணவர்கள் பரீட்சைக்கு உரிய அணியுடன் சமூகமளிக்காதபோது மீள்பரீட்சாத்தியாக மீளவும் அடுத்த ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றுகின்றபோது ஏதேனும் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டுமா?
இல்லை. ஆனால் மாணவர்கள் தங்களது அணிக்கான உரிய பரீட்சை
நடைபெற்றதிலிருந்து அடுத்துவரும் மூன்று அணிகளுடன் மாத்திரம்
மேன்முறையீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிக்காமல் மீள்பரீட்சைக்கு
அனுமதிக்கப்படுவர்.
மாணவர்கள் உரிய அணியுடன் பரீட்சை நடைபெற்றதிலிருந்து அடுத்துவரும் மூன்று அணிகளுடனும் பரீட்சைக்குச் சமூகமளிக்காதபோது மீள்பரீட்சாத்தியாக மீளவும் பரீட்சைக்குத் தோற்றுகின்றபோது ஏதேனும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவேண்டுமா?
ஆம். மாணவர்கள் உரிய அணியுடன் பரீட்சை நடைபெற்றதிலிருந்து அடுத்துவரும் மூன்று அணிகளுடனும் பரீட்சைக்குச் சமூகமளிக்காதபோது மீள்பரீட்சாத்தியாக மீளவும் பரீட்சைக்கு அனுமதிபெற வேண்டுமாயின் மேன்முறையீட்டுப்படிவம் சமர்ப்பித்தல் கட்டாயமானதாகும்.
தபால் மூலம் அனுப்பப்படும் தொடர்மதிப்பீடுகள் பெறப்பட்டுவிட்டதா என்று எவ்வாறு அறிந்துகொள்வது?
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் ஒவ்வொரு அணிக்கான Tutor-Mentor இனைத் தொடர்புகொண்டு வடஸ்அப் குழுமம் (WhatsApp Group) மூலம் உங்களால் அனுப்பப்படும் தொடர்மதிப்பீடுகள் பெறப்பட்டுவிட்டதா என அறிந்துகொள்ள முடியும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்மதிப்பீடுகளை (Assignments) சமர்ப்பிக்கமுடியுமா?
இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையமானது
மூடப்பட்டிருக்கும்.
SIS இல் துணைப்பாட அலகினை (Supplementary Unit) முதற்தடைவையாக தெரிவுசெய்த பின்னர் பாடத்தெரிவினை (Subject Selection) பின்னர் மாற்றலாமா?
Subject Selection விண்ணப்பத்தின் முடிவுத்திகதிக்கு முன்னர் உங்களுடைய Tutor- Mentor இனைத் தொடர்புகொண்டு தெரியப்படுத்துவதன் மூலம் பாடஅலகினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் உங்களுக்கு வழங்கப்படும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக் கல்வி மையத்தின் மாணவர் தகவல் முறைமையில் (CODL-SIS) பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:
- பதிவு தளத்திற்கு செல்லவும்:இணைய உலாவியில் https://www.odsis.jfn.ac.lk/register என்ற முகவரியைத் திறக்கவும்.
- புதிய கணக்கை உருவாக்கவும்:
- “Create CODL-SIS-UOJ Account” என்ற தலைப்பின் கீழ், தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.
- கடவுச்சொல்: 8 அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகளுடன், எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களின் கலவை கொண்ட கடவுச்சொல்லை உருவாக்கவும்.
- தகவல்களைச் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்:
- உங்கள் தகவல்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி, “Next” பொத்தானை அழுத்தவும்.
- உள்ளக கணக்கைச் செயல்படுத்தவும்:
- பதிவு செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் உறுதிப்படுத்தல் இணைப்பைச் சொடுக்கி, உங்கள் கணக்கைச் செயல்படுத்தவும்.
- உள்நுழையவும்:
- கணக்கைச் செயல்படுத்திய பிறகு, https://www.odsis.jfn.ac.lk/login முகவரியில் உங்கள் பதிவு எண் (கீழ்க்கோடு இல்லாமல்) மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும்.
மேலும் உதவிகளுக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக் கல்வி மையத்தின் அனுமதி மற்றும் பதிவுப் பிரிவின் உதவி/பிரதிப்பதிவாளர் உடன் தொடர்பு கொள்ளவும்