Closing Date: 30/09/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தினால் நடத்தப்படுகின்ற மேற்கண்ட கற்கைநெறிக்குத் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்
- கீழே உள்ள Google form link மூலம் விண்ணப்பிக்கவும்.
Google Form [Link] - நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன், உங்கள் விண்ணப்பத்தின் மென்பிரதியானது (Soft copy) உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும்.
- விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டு, அதனுடன் கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு (Payment slip) மற்றும் அனைத்துக் கல்வி மற்றும் தொழில்சார் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, கீழ்வரும் முகவரிக்கு 30.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாகப் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.
பிரதிப் பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
உறையின் இடது மேல் மூலையில் “Diploma in Yoga – Batch I” என்பது தெளிவாக எழுதப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.
கட்டணம் செலுத்துவதற்கான விவரங்கள்
- விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1,000
- வங்கியின் பெயர்: மக்கள் வங்கி (People’s Bank)
- வங்கி கணக்கு இலக்கம் : 0267500027804657

பிரதிப் பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையம்.
15.09.2026
