Description
DURATION
ஒரு வருடம்
MEDIUM
தமிழ்
COURSE DESCRIPTION
- தமிழ் இலக்கண வரலாற்றினையும் இலக்கண அடிப்படைகளையும் தெளிவாக அறிந்திருத்தல்
- மூல நூல்களினைப் பயன்படுத்தி தமிழ் இலக்கணத்தில் உள்ள சிக்கல்களை தீர்த்தல்
- தமிழ் இலக்கண இலக்கியங்கள் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனங்களை மேற்கொள்ளுதல்
- தமிழ் இலக்கியங்களின் தொன்மையான புலமைத்துவத்தினை வெளிப்படுத்தல் இலக்கிய வடிவங்களைப் பற்றிய
- தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு மற்றும் விழுமியங்கள் பற்றிய ஆழமான அறிவினைக் கொண்டிருத்தல்
- சுயமாக கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கியங்களை மேற்கொள்வார்கள்
- தமிழ் இலக்கியங்கள் காட்டும் உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களை கண்டறிந்து அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்
ADMISSION CRITERIA
தமிழ்ப் பாலபண்டித பரீட்சைக்குத் தோற்றுவோர் பின்வரும், ஐந்து தகுதிகளில் ஒன்றையேனும் பெற்றிருத்தல் வேண்டும் (முன்னுரிமையடிப்படையிலான தகுதி நிலைகள்)
- யாழ்ப்பாண ஆரிய திராவிட அபிவிருத்திச் சங்கத்தினது தமிழ்ப் பண்டித பாடத்திற்கான பிரவேச பரீட்சையிற் சித்தி பெற்றிருத்தல்
- சைவப் புலவர் அல்லது சைவசித்தாந்த பண்டிதராயிருத்தல்
- க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தமிழ்மொழி அல்லது தமிழ் இலக்கியம் அல்லது தமிழ் மொழியும் இலக்கியமும் முதலான பாடங்களில் ஒன்றிலாவது திறமைச் சித்தி பெற்றிருத்தல்.
- க.பொ.த உயர்தர பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான சித்தி பெற்றிருத்தல்.
- ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அல்லது தேசிய கல்வியியற் கல்லூரி பேன்ற ஏதாவது ஒன்றில் பயிற்றப்பட்ட ஆசிரியராயிருத்தல்.
- அத்துடன் யாழ்ப்பாணம் ஆரிய திராவிடஅபிவிருத்திச் சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும் (பற்றுச் சீட்டு அல்லது சங்கத்தினால் வழங்கப்படும் உறுப்புரிமையினை உறுதிப்படுததும் கடிதம்)