மேற்படி வணிகமாணிக் கற்கைநெறிக்கு கல்வியாண்டு 2022/2023 மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்களின் பிரகாரம், தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் விபரம் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
- புகைப்பட சான்றிதழ் படிவம் [PDF]
- மாணவர்களைப் பதிவுசெய்வதற்கான படிவம் [PDF]
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் பதிவு செய்வதற்கான நேர அட்டவணை [PDF]
- பதிவு செய்யும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் [PDF]
மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் பதிவினை மேற்கொள்வதற்காக 21.12.2024 மற்றும் 22.12.2024 ம் திகதிகளில் நேரில் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறுதல், அல்லது போலியான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் குறித்த திகதியில் நேரில் சமூகமளிக்காதோரின் விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும் என்பதுடன், எக்காரணம் கொண்டும் கொடுப்பனவுகள் எவையும் மீளளிக்கப்படமாட்டாது, என்பதனையும் தாங்கள் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு 021-222-3612 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
முக்கிய குறிப்பு: மேற்படி கற்கைநெறிக்குரிய விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் முழுவதும் தமிழ்மொழிமூலம் இடம்பெறும்.
உதவிப் பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.
09.12.2024