வணிகமாணிக் கற்கைநெறி பரீட்சைகளுக்கு பரீட்சார்த்திகள் CODL-SIS இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும்.
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
வணிகத்தில் நான்காம் தேர்வு – முதலாம் அரையாண்டுப் பரீட்சை – 2022 (அணி V)
வணிகத்தில் ஜந்தாம் அரையாண்டுப் பரீட்சை -2022 – New Curriculum – (அணி VI)
வணிகத்தில் இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை -2021 – New Curriculum – (அணி VII)
வணிகத்தில் மூன்றாம் தேர்வு -முதலாம் அரையாண்டுப் பரீட்சை – 2022- Old Curriculum
வணிகத்தில் முதலாம் தேர்வு – இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2021 – Old Curriculum
மேற்படி பரீட்சை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் தை 2025 இரண்டாம் வாரத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பரீட்சைக்கு தோற்றத் தகுதியான பரீட்சார்த்திகள் CODL-SIS இணையத்தளத்தில் (விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்) விண்ணப்பப் படிவத்தினை பூர்த்திசெய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள். மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான இறுதித் திகதி 28.12.2024 சனிக்கிழமை ஆகும்.
இப்பரீட்சைக்கு தோற்றும் மீள் பரீட்சார்த்திகள் பாட அலகு ஒன்றிற்கு ரூபா 1500.00 வீதம் 890002080003097 என்ற மக்கள் வங்கி கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்து பற்றுசீட்டுப் பிரதியினை இணைத்தல் வேண்டும்.
குறிப்பு : மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் 021-2223612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.
23.12.2024