Back

வணிகமாணி சிறப்புக் கற்கைநெறி – 2026

Closing Date: 15.04.2026 (புதன்கிழமை)

வணிகமாணி சிறப்புக் கற்கைநெறி – 2026 | Batch-X (2024/2025)

அனுமதிக்கான தகைமைகள்:

  • க.பொ.த. (உ/த) பரீட்சை (வணிகப்பிரிவு) – 2024 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியானவர்கள்.
    அல்லது
  • பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு சமமான தகைமையைக் கொண்டவர்கள்

மாணவர் தெரிவு

விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் (Z-score) அல்லது பொது உளச்சார்புப்பரீட்சை அல்லது நேர்முகப் பரீட்சை அல்லது மூன்றின் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள்;. பொது உளச்சார்புப் பரீட்சைக்கான தேவை ஏற்படின் பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தல்

மேற்படி கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழ் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
 
1. எமது மாணவர் தரவு முறைமைக்கு (Student Information System -SIS)  https://www.odsis.jfn.ac.lk/guest  இவ்விணைப்பினூடாக சென்று உங்களுக்கான கணக்கு (account) ஒன்றை முதலில் உருவாக்கி கொள்ளுங்கள். அதனை தொடர்ந்து
எனும் இவ்விண்ணப்படிவ இணைப்பை அழுத்தி உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுங்கள். இணையவழி விண்ணப்பப் படிவத்தில் கோரப்படும் விடயங்களுக்குச் சரியான விபரங்கள் உள்ளீடு செய்வதனை உறுதி செய்யவும்.
 
2. மாணவர்களின் விபரம் மற்றும் தகைமைகளை பரிசீலிக்க ஏதுவாக பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதி நகல் செய்யப்பட்டு (Scan) JPG  கோப்பாக பதிவேற்றப்படல் வேண்டும் (குறித்த கோப்பின் அளவானது 5MB இற்கு மேற்படாதவாறு பதிவேற்றப்படல் வேண்டும்)
  • தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
  • பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
  • க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் (க.பொ.த (உ/த) பரீட்சை – 2024 அல்லது அதற்கு முற்பட்ட அதிகூடிய பெறுபேற்றுச் சான்றிதழ்)
  • அல்லது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு சமனான அல்லது அதற்கு மேலான கல்வித்தகைமைச் சான்றிதழ்
  • திருமணச் சான்றிதழ் (திருமணமான பெண் மாணவர்கள் மட்டும்)
 
3. விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1000.00 இனை 890102080000067 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டினை நகல் செய்யப்பட்டு (Scan) JPG கோப்பாக பதிவேற்றப்படல் வேண்டும்.
 
4. கீழ் காட்டப்பட்டுள்ள கொடுப்பனவுச்சீட்டின் மாதிரியை பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணமானது செலுத்தப்படல் வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
5. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து அதனுடன்  கொடுப்பனவுச் சீட்டின் மூலப்பிரதி ( இல 03 இல் குறிப்பிட்ட) மற்றும் பதிவேற்றப்பட்ட(இல 02 இல் குறிப்பிட்ட ) ஆவணங்களின் பிரதிகளையும் 15.04.2026 (புதன்கிழமை) அல்லது அதற்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘வணிகமாணி சிறப்புப் பட்டப்படிப்பு –Batch X (2024/2025) ‘ என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
 
பதிவுத்தபால் அனுப்ப வேண்டிய முகவரி :
பிரதிப் பதிவாளர்
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
 
6. இக்கற்கைநெறிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான மேலதிக அறிவித்தல்கள்; அனைத்தும் எமது திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தளத்தில் https://codl.jfn.ac.lk பிரசுரிக்கப்படும்.
 
 
 பதிவாளர்,
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
  07.03.2026