புதிய அனுமதிக்கான விண்ணப்பம் – 2025 – 15ம் அணி | வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பு – 2023/2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அனுமதிக்கான தகைமைகள்
- க.பொ.த. (உ/த) பரீட்சை – 2023 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% ஆன புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
- பௌதீக விஞ்ஞானப்பிரிவு, உயிரியல் விஞ்ஞானப்பிரிவு, வணிகப்பிரிவு, கலைப்பிரிவு மற்றும் தொழினுட்பப்பிரிவு ஆகிய எப்பாடப் பிரிவினரும் விண்ணப்பிக்க முடியும்.
முக்கிய குறிப்பு: இலங்கைப் பல்கலைக்கழகமொன்றில் உள்வாரியாக பட்டப்படிப்பொன்றுக்காக பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாகாது.
விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தல்
விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1000.00 இனை 050152150001418 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி Application Link எனும் இணைப்பின் ஊடாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
விண்ணப்ப முடிவுத்திகதி
11.05.2025 (ஞாயிற்றுக்கிழமை) பின்னிரவு 11.59 (விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து அதனுடன் கொடுப்பனவுச் சீட்டின் மூலப்பிரதியினை (Original Slip) இணைத்து 23.05.2025 (வெள்ளிக்கிழமை) அல்லது அதற்கு முன்னர் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்கு நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் (Registered Post) மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பு – 2023/2024 – 15ம் அணி‘ என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
பதிவுத்தபால் அனுப்ப வேண்டிய முகவரி
சிரேஷ்ட உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
மேலதிக விபரங்களை 021 222 3612 என்ற தொலைபேசி எண்ணினூடாக அல்லது https://www.codl.jfn.ac.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுகொள்ளலாம்.
பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
07.04.2025
மேற்படி கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழ் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு
வேண்டப்படுகின்றீர்கள்.
- இணையவழி விண்ணப்பப் படிவத்தில் கோரப்படும் விடயங்களுக்குச் சரியான விபரங்கள் உள்ளீடு செய்வதனை உறுதி செய்யவும்.
- மாணவர்களின் விபரம் மற்றும் தகைமைகளை பரிசீலிக்க ஏதுவாக பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதி நகல் செய்யப்பட்டு (Scan) ஒரே PDF கோப்பாக பதிவேற்றப்படல் வேண்டும் (குறித்த கோப்பின் அளவானது 10MB இற்கு மேற்படாதவாறு பதிவேற்றப்படல் வேண்டும்)
- தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
- க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் (க.பொ.த (உ/த) பரீட்சை – 2023 அல்லது அதற்கு முற்பட்ட அதிகூடிய பெறுபேற்றுச் சான்றிதழ்)
- கீழ் காட்டப்பட்டுள்ள கொடுப்பனவுச்சீட்டின் மாதிரியை பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணமானது செலுத்தப்பட வேண்டும்.
- மாணவர்கள் விண்ணப்பித்தமையினை உறுதி செய்ய, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் (Submitted Application Form) மற்றும் விண்ணப்பக் குறிப்பிலக்கத்துடன் ((Reference No.) கூடிய மின்னஞ்சல் பதிலளிப்பு அனுப்பப்படும்.
- இக்கற்கைநெறிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான மேலதிக அறிவித்தல்கள் அனைத்தும் எமது திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தளத்தில் https://www.codl.jfn.ac.lk பிரசுரிக்கப்படும்.