Back

வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பு -2026 | 16ம் அணி (2024/2025)

விண்ணப்ப முடிவுத்திகதி 15.05.2026 (வெள்ளிக்கிழமை)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அனுமதிக்கான தகைமைகள்

  • க.பொ.த. (உ/த) பரீட்சை – 2024 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  • பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% ஆன புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
  • பௌதீக விஞ்ஞானப்பிரிவு, உயிரியல் விஞ்ஞானப்பிரிவு, வணிகப்பிரிவு, கலைப்பிரிவு மற்றும் தொழினுட்பப்பிரிவு ஆகிய எப்பாடப் பிரிவினரும் விண்ணப்பிக்க முடியும்.
    முக்கிய குறிப்பு:  இலங்கைப் பல்கலைக்கழகமொன்றில் உள்வாரியாக பட்டப்படிப்பொன்றுக்காக பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாகாது

விண்ணப்ப முடிவுத்திகதி

15.05.2026 (வெள்ளிக்கிழமை) பின்னிரவு 11.59 (விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)

விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தல்

மேற்படி கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழ் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

  1. எமது மாணவர் தரவு முறைமைக்கு (Student Information System-SIS) https://www.odsis.jfn.ac.lk/guest இவ்விணைப்பினூடாக சென்று உங்களுக்கான கணக்கு (account) ஒன்றை முதலில் உருவாக்கி கொள்ளுங்கள்.

    அதனை தொடர்ந்து
    Online Application Form Link [Click here to Apply]
    எனும் இவ்விண்ணப்படிவ இணைப்பை அழுத்தி உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.

    இணையவழி விண்ணப்பப் படிவத்தில் கோரப்படும் விடயங்களுக்குச் சரியான விபரங்கள் உள்ளீடு செய்வதனை உறுதி செய்யவும்.

  1. மாணவர்களின் விபரம் மற்றும் தகைமைகளை பரிசீலிக்க ஏதுவாக பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதி நகல் செய்யப்பட்டு (Scan) JPG கோப்பாக பதிவேற்றப்படல் வேண்டும்.
    (குறித்த கோப்பின் அளவானது 1MB இற்கு மேற்படாதவாறு பதிவேற்றப்படல் வேண்டும்)
    • தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
    • பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
    • க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் (க.பொ.த (உ/த) பரீட்சை – 2024 அல்லது அதற்கு முற்பட்ட அதிகூடிய பெறுபேற்றுச் சான்றிதழ்)
    • திருமணச் சான்றிதழ் (திருமணமான பெண் மாணவர்கள் மட்டும்)
  1. விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1000 இனை 1267500921504360 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டு நகல் செய்யப்பட்டு (Scan) JPG கோப்பாக பதிவேற்றப்படல் வேண்டும்.
  2. கீழ் காட்டப்பட்டுள்ள கொடுப்பனவுச்சீட்டின் மாதிரியை பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணமானது செலுத்தப்பட வேண்டும்.

  1. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து அதனுடன் கொடுப்பனவுச் சீட்டின் மூலப்பிரதி (Original Slip) மற்றும் பதிவேற்றப்பட்ட ஆவணங்களின் பிரதிகளையும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) அல்லது அதற்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பு – 2024/2025 – 16ம் அணி” என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.பதிவுத்தபால் அனுப்ப வேண்டிய முகவரி :

    பிரதிப்பதிவாளர்,
    திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
    திருநெல்வேலி,
    யாழ்ப்பாணம்.

  1. இக்கற்கைநெறிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான மேலதிக அறிவித்தல்கள் அனைத்தும் எமது திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தளத்தில் https://codl.jfn.ac.lk/ பிரசுரிக்கப்படும்.

பிரதிப்பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
17.04.2026