முதலாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை -2021 (மீள் பரீட்சை) இரண்டாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை -2020 (மீள் பரீட்சை)
மேற்படி பரீட்சைக்கு CODL SIS இணையத்தளத்தில் மீள் பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்தல் வேண்டும் பூரணப்படுத்தப்பட்ட இப்படிவமானது புதன்கிழமை 05.03.2025 ஆம் திகதியிலிருந்து 12.03.2025 (புதன்கிழமை) வரையான காலப்பகுதியில் அலுவலக தினங்களில் (காலை 9.30 மணி தொடக்கம் மாலை 03.45 மணி வரை) திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். குறித்த திகதிவரை கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களின் பாட ஒழுங்குகளுக்கு ஏற்றவாறு பரீட்சைநேர அட்டவணையானது தயாரிக்கப்படும் என்பதுடன், குறித்த திகதிக்கு பின்னர் விண்ணப்பங்களை ஏற்றுகொள்வது நேர அட்டவணையில் முரண்பாடுகளை எற்படுத்தும் என்பதால் எக்காரணங்கொண்டும் மேற்குறிப்பிட்ட திகதிக்குப்பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் பரீட்சை அனுமதி அட்டை வழங்குதல் மற்றும் பரீட்சை நேர அட்டவணை தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
மீள் பரீட்சை விண்ணப்பப்படிவம் : https://shorturl.at/qq6Kb
முக்கிய குறிப்பு :ஏற்கனவே CODL SIS இணையத்தளத்தில் மீள் பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் மட்டுமே இவ் விண்ணப்பபடிவத்தை பூரணப்படுத்தல் வேண்டும
சிரேஷ்ட உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்