Back

கலைமாணி கற்கைநெறி – 2026

Closing Date:  15.04.2026 (புதன்கிழமை) 

புதிய அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவுறுத்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த கலைமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அனுமதிக்கான தகைமைகள்

க.பொ.த. உயர் தர  பரீட்சை 2023 அல்லது அதற்கு முன்னர் அங்கீரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்து இருப்பதுடன் பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% மான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள்.   அல்லது NVQ Level-04, டிப்ளோமாக்கள், மொழி டிப்ளோமாக்கள், சான்றிதழ்கள் அல்லது யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் மூதவையால்  ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் தொடர்புடைய மற்றும் சமமானது என கருதப்படும் தகைமைகளைக்  கொண்டவர்கள்

மாணவர்தெரிவு

விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சை அல்லது பொது உளச்சார்புப்பரீட்சை அல்லது இரண்டும் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தல்

எமது மாணவர் தரவு முறைமைக்கு (Student Information System -SIS)  https://www.odsis.jfn.ac.lk/guest இவ்விணைப்பினூடாக சென்று உங்களுக்கான கணக்கு (Create Account) ஒன்றை முதலில் உருவாக்கி கொள்ளுங்கள்.

அதனை தொடர்ந்து

Application Link

எனும் இவ்விண்ணப்படிவ இணைப்பின் மூலம் உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுங்கள். இணையவழி விண்ணப்பப் படிவத்தில் கோரப்படும் விடயங்களுக்குச் சரியான விபரங்கள் உள்ளீடு செய்வதனை உறுதி செய்யவும்.

மாணவர்களின் விபரம் மற்றும் தகைமைகளை பரிசீலிக்க ஏதுவாக பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதி நகல் செய்யப்பட்டு (Scan) JPG கோப்பாக பதிவேற்றப்படல் வேண்டும்

(குறித்த கோப்பின் அளவானது 5MB இற்கு மேற்படாதவாறு பதிவேற்றப்படல் வேண்டும்)

  1. தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
  2. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
  3. க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் (க.பொ.த (உஃத) பரீட்சை – 2023 அல்லது அதற்கு முற்பட்ட அதிகூடிய பெறுபேற்றுச் சான்றிதழ்)
  4. அல்லது NVQ Level-04 டிப்ளோமாக்கள், மொழி டிப்ளோமாக்கள், சான்றிதழ்கள் அல்லது யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் மூதவையால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் தொடர்புடைய மற்றும் சமமானது என கருதப்படும் தகைமைகளைக்  கொண்டவர்கள்.
  5. திருமணச் சான்றிதழ் (திருமணமான பெண் விண்ணப்பதாரிகள் மட்டும்)

விண்ணப்பக் கட்டணமாக  ரூபா 1000.00 இனை 890072140004088 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டினை Payment Slip நகல் செய்யப்பட்டு (Scan) JPG கோப்பாக பதிவேற்றப்படல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத்திகதி 15.04.2026 (புதன்கிழமை)  பின்னிரவு 11:59 (விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.)

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து அதனுடன்  கொடுப்பனவுச் சீட்டின் மூலப்பிரதி மற்றும் பதிவேற்றப்பட்ட (uploaded)ஆவணங்களின் பிரதிகளை 25.04.2026 (சனிக்கிழமை) அல்லது அதற்கு முன்னர் நேரடீயாகவோ அல்லது தபால் மூலமாகவோ திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திற்கு தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் “கலைமாணி  –Batch-V  (2023/2024)” என தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பதிவுத்தபால் அனுப்ப வேண்டிய முகவரி :
பிரதிப் பதிவாளர்
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்